தமிழகத்தில் முதலில் மிகப்பெரிய கட்சியாக திகழ்ந்தது திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) மட்டும் தான். இக்கட்சியின் தலைவராக அப்போது சி.என்.அண்ணாதுறை இருந்தார். அண்ணா துறையின் மறைவிற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் ஆனார் மு.கருணாநிதி (கலைஞர்). இவர் சிறந்த எழுத்தாளர்,பேச்சாளர் மற்றும் அரசியல்வாதி. கட்சியில் அப்போது பொருளாளராக இருந்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர் திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டார். கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி தலைவரிடம் கேட்க தலைவர் பொருளாளரை கட்சியை விட்டே நீக்கிவிட்டார். திராவிடக் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் கட்சியின் சிறு தொண்டனான அனகாபுத்தூர் இராமலிங்கம் தொடங்கிய அதிமுக கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். பின் கட்சியின் தலைவரான எம்.ஜி.ஆர் கட்சியின் பெயரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றினார். இப்பெயர் மாற்றத்தை கட்சியின் தொண்டர்கள் முதலில் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் பின் தான் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறேன் என்று கூறியவுடன் எம்.ஜி.ஆர் மீது கொண்ட அதீத மரியாதையில் அனைவரும் ஏற்றனர். அனகாபுத்தூர் இராமலிங்கத்தை மேல் சபை உறுப்பினராக (எம்.எல்.சி) மாற்றினார். 1972 ல் தொடங்கப் பட்ட இக்கட்சியின் சின்னமாக இரட்டை இலை தேர்வு செய்யப்பட்டது. கட்சியின் கொடியாக கருப்பு, சிவப்பு நிறம் அதில் தாமரை இருப்பது போன்று உருவாக்கி, மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் இயற்றினார். பின் அண்ணாவின் சிறந்த படத்தை தேடி அண்ணா ஆணையிடுவது போன்ற படத்தை கருப்பு, சிவப்பு கொடியோடு சேர்த்து அதிமுக கொடி உருவாக்கப்பட்டது. இக்கொடியானது எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார். இக்கட்சியின் கொடி அன்றைய நாட்களில் அனைத்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வீட்டில் அலங்காரக் கொடியாக திகழ்ந்தது.